சேலம், செப்.11: சேலம் செவ்வாய்பேட்டை பைக்காரா தெருவை சேர்ந்தவர் அஜ்மீர்கனின்(31). தேவர்சிலை மாதவராயன் தெருவை சேர்ந்த ஹரிஹரன்(32). சந்திரையன்தெருவை சேர்ந்த கிஷோர்(25). இவர்களின் வீட்டின் முன்பு டூவீலர்களை நிறுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் காலை எழுந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 டூவீலர்களையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரித்தபோது, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் சிக்கினர். அவர்கள் தான் 3 டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 3டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் 14வயது என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் சேர்த்தனர்.
+
Advertisement