கெங்கவல்லி, செப்.10: ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(26). தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேனாக பணியாற்றி வரும் இவர் கடந்த 7ம் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டின் எதிரே டூவீலரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது வண்டி காணாததை கண்டு திடுக்கிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டூவீலரை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆத்தூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் திருமன்(22) என்பவர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். டூவீலர் கைப்பற்றப்பட்டது.
+
Advertisement