கெங்கவல்லி, செப்.10: ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 45 விவசாயிகள், 407 பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ரூ.7,069 முதல் ரூ.7,889 வரையிலும், டிசிஎச் ரகம் ரூ.9,269 முதல் ரூ.10,289 வரையிலும், கொட்டுப்பருத்தி ரூ.3,989 முதல் ரூ.4,869 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு, பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement