கெங்கவல்லி, அக்:9:தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் சப் டிவிஷன் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ், ஆத்தூர் சப் டிவிஷன், ஆத்தூர் நகரம், ஆத்தூர் ரூரல், தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். விபத்து நடைபெறும் இடங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அரவணைப்போடு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வுப் பணியை முடித்து விட்டு, கோவையில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கு சென்றார்.