சேலம், ஆக.9: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநில அளவில், 37வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற கவின்ராஜா, சுந்தரமூர்த்தி, சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 20 வயதிற்குட்பட்டோருக்கான போல்வால்ட் போட்டியில் கவின்ராஜா 5மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றார். சுந்தரமூர்த்தி 4.10 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கமும், சவுந்தர்யா 3.40 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களை தடகள பயிற்சியாளர் இளம்பரிதி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement