ஓமலூர், ஆக.9: ஓமலூரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு, ஆத்தூர் மற்றும் மேட்டூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோத மது விற்பனையை தடுத்து பல்வேறு இடங்களிலும் 1,323 லிட்டர் அடங்கிய, 6,839 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த பாட்டில்கள், மதுவிலக்கு டி.எஸ்.பி மகாவிஷ்ணு, டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. ஓமலூர் அருகே வேலாகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏரியில் கொட்டி, பொக்லைன் மூலம் பாட்டிகளை உடைத்து அழித்தனர். பின்னர் உடைக்கப்பட்ட அனைத்து பாட்டில்களையும், பள்ளம் தோண்டி ஏரியில் புதைக்கப்பட்டது.
+
Advertisement