சேலம், அக்.8: சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு சட்டம் சார்ந்த உதவிகளுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு சட்டம் சார்ந்த உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால், அதனை இலவசமாக வழங்கிட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.12-ல் சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஒரு வழக்கறிஞர் வருகை புரிவார்கள். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு சட்டம் சார்ந்த உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் சட்ட மையத்தினை அணுகி பயனடையலாம்,’’ என்று தெரிவித்துள்ளார்.
+
Advertisement