சேலம், ஆக.8: மறைந்த திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் கட்சியினரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன்படி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று காலை மவுன ஊர்வலம் நடந்தது. மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம் வழியாக பெரியார் மேம்பாலத்தை தாண்டி அண்ணாபூங்கா அருகில் இருக்கும் கலைஞர் சிலை வரை ஊர்வலம் சென்றது. பின்னர் அமைச்சர் ராஜேந்திரன், கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர அவைத்தலைவர் முருகன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மாநகர பொருளாளர் செரீப், மாநில தேர்தல்பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில தகவல் தொழிற்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண், செயற்குழு உறுப்பினர்கள் கே.டி.மணி, ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அமான், பூபதி, மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன், பகுதி செயலாளர்கள் சரவணன், ஜெகதீஸ், பிரகாஷ், மணமேடு மோகன், இப்ராகிம், இளைஞரணி மாநகர அமைப்பாளர் கேபிள் சரவணன், மாணவரணி அமைப்பாளர் கோகுல்காளிதாஸ், கவுன்சிலர்கள் குணசேகரன், கோபால், சீனிவாசன், மஞ்சுளா, திருஞானம், தெய்வலிங்கம், நெசவாளர் அணி ஓ.டெக்ஸ். இளங்கோவன், அன்வர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.