சேலம், அக்.7: சேலத்தில் வாலிபரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்த வேங்காம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (38). இவர் வேலை விஷயமாக நேற்று முன்தினம் கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, டூவீலரில் வந்த 3 நபர்கள், பெருமாளை மிரட்டி ரூ.500ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் பெருமாள் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் பறிப்பில் ஈடுபட்ட சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்கிற கொரில்லா செந்தில் (35), கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்கிற போர்மேன் பிரதாப் (37) மற்றும் களரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (49) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement