சேலம், அக்.7: சேலத்தில் இ-சேவை மையத்தில் லேப் டாப்பை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (40). இவர் அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 2ம் தேதி இவரது இ-சேவை மையத்தில் இருந்த லேப்டாப்பை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பிரபாகரன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இ-சேவை மையத்தில் வைத்திருந்த லேப் டாப்பை திருடியது தாதகாப்பட்டி அம்மாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(21), தாகூர் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement