தம்மம்பட்டி, டிச.5: தம்மம்பட்டி காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில், கார்த்திகை மாத பவுர்ணமி இரவில், படித்துறையில் சுவேதா நதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிலவொளியில் சுவேத நதிக்கு தீபங்கள் ஏற்றி வைத்தும், பூக்களை தூவியும் பெண்கள் வழிபாடு செய்தனர். அதேவேளையில், பவுர்ணமி நிலவிற்கும் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். ஆரத்தி பூஜையின் மூலம் சுவேத நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வற்றாத ஜீவநதியாக விளங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து பள்ளியறை பூஜையுடன் வழிபாடு நிறைவுபெற்றது. நிகழ்வில் தம்மம்பட்டி மற்றம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
+
Advertisement

