இடைப்பாடி, நவ.5: இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் 325 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 325 வாக்குச்சாவடி அலுவலர்கள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சிகளில் ஒவ்வொரு பகுதிகளில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கொங்கணாபுரம் பேரூராட்சி 7வது வார்டு மாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகளில் வாக்குச்சாவடி அலுவலர் சரிபார்க்கும் பணியை, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார் வைத்திலிங்கம், துணை தாசில்தார் கர்ணன், பேரூராட்சி தலைவர் சுந்தரம், திமுக பேரூர் செயலாளர் அர்த்தனாரிஸ்வரன், அதிமுக பேரூர் செயலாளர் பழனிச்சாமி, ஆர்ஐ அன்புக்கரசி, விஏஓ ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement
