கெங்கவல்லி, டிச.4: தலைவாசல் மத்திய ஒன்றிய திமுக சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் சாத்தப்பாடி மணி(எ) பழனிசாமி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாத்தப்பாடி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில் கிளை செயலாளர் ராஜா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமர், உதவித்தலைவர் வரதன் ரவிச்சந்திரன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அழகுவேல், ஒன்றிய துணை செயலாளர் அழகுவேல், சித்தேரி கண்ணுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

