ஏற்காடு, நவ.1: ஏற்காட்டில் வேளாண் உழவர் நலத்துறை, தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், உள் மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், மண்புழு உரம் தயாரிப்பு என்ற தலைப்பில், வாழவந்தி சேட்டுகாடு கிராமத்தில் மண்புழுக்களை தேர்வு செய்வது, அதனை பராமரிப்பு செய்து அறுவடை வரை உள்ள முறைகளை தெளிவாக வட்டார விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி எடுத்துரைத்தார். தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் ஷிரீன், விவசாய அடையாள எண் பற்றியும், துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், விதை இருப்பு, விதை பண்ணை ஆகியவற்றை விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜவேல் மண் மாதிரி, உயிரி உரங்களின் முக்கியத்துவம் பற்றி கூறினார். ஏற்பாடுகளை ஆட்மா தலைவர் தங்கசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் துரையரசு, அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement
