இடைப்பாடி, நவ.1: கொங்கணாபுரத்தில் 26 மூட்டை கொப்பரை ரூ.1.81 லட்சத்திற்கு ஏலம் போனது. 178 மூட்டை கடலைக்காய் ரூ.2.19 லட்சத்திற்கு ஏலம் போனது. இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 26 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் ரூ.166 முதல் ரூ.2.17.30 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.140.50 முதல் ரூ.160.50 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.1.81 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல், 178 கடலைக்காய் மூட்டைகள் ரூ.2.18 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில், பட்டாணி ரகம் ஈரப்பதம் 60 கிலோ மூட்டை ரூ.1409 முதல் ரூ.1966 வரையிலும், உலர்ந்தது ரூ.2136 முதல் ரு.3539 வரையிலும் ஏலம் போனது.
+
Advertisement
