சேலம், ஜூலை 15: சேலத்தில் உள்ள தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜேசிஐ சேலம் ரைசர்ஸ் இணைந்து மாணவர்களுக்கு வாழ்வுத் திறன் மற்றும் தொழில்முனைவுத் திறன்களை வழங்கும் வகையில், பயிற்சிப் பட்டறை மற்றும் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பொறியாளர்கள் மோகன் குமார், சிலம்பரசன், அர்விந்த், கிரண் முரளி, மனிகண்டன் மற்றும் துறை தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜேசிரு வித்யாதேவி மதிப்பீட்டாளரால் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
பயிற்சி தொடர் வழியாக, மாணவர்கள் மனநிலை கட்டமைப்பு, முயற்சித் திறன் வளர்ச்சி, தொடர்பாடல் திறன் ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர். பயிற்சிகளை ஜே.சி.ஐ சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் நடத்தினர். கல்லூரி செயலாளர் அர்ச்சனா மனோஜ்குமார், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் அனைத்து பயிற்றுவிப்பாளர்கள், தொழில் முனைவோர்களை பாராட்டி வாழ்த்தினர்.