ஆத்தூர், நவ.18: ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளின் பங்களிப்போடு நடைபெற்ற கண்காட்சியை, பொறியியல் கல்லூரி முதல்வர் பாலகண்ணன் தொடங்கி வைத்தார். சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் பாலகுமார் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் செல்வம், நிறுவனர்கள் முகமது ஈஷா, கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சுகந்தி வரவேற்றார். கண்காட்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கங்களையும் மாணவர்கள் அளித்தனர். இந்த கண்காட்சியினை ஏராளமான பெற்றோர்களும், பொதுமக்களும் கண்டு களித்தனர்.
+
Advertisement


