ஓமலூர், ஜூலை 31: ஓமலூர் காவல் நிலையம் சார்பில், போலீசார் - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள 23 கிராமங்களிலும், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவியர் பங்கேற்று விளையாடுகின்றனர். ஓமலூரை அடுத்த காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில், கிராமப்புற இளைஞர்களுடன் சேர்ந்து போலீசார் கைப்பந்து விளையாடினர். இளைஞர்கள் செல்போனில் மூழ்காமல், மைதானத்தில் விளையாட வேண்டும். இதனால், உடல், மன ஆரோக்கியம் ஏற்படும். போதை பழக்கத்திற்கு யாரும் போக கூடாது, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க போலீசார் தயாராக உள்ளனர். போலீசாரின் உதவிகளை மக்கள் பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
+
Advertisement