கெங்கவல்லி ஜூலை 31:கெங்கவல்லி அருகே தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் முத்துவேலு(57). 2010ம் ஆண்டு தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த இவர், தமிழ் பாடத்தில் மாணவ, மாணவிகளை அதிக மதிப்பெண்களை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இம்மாதத்துடன் 30 ஆண்டு கால பணியை நிறைவு செய்துள்ளார். 30 வருட காலத்தில் மாணவர்களை சிறந்த மதிப்பெண்களை எடுக்க வைத்த இவரது பணியை பாராட்டி, ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியர் குருநாதன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் ஜெயபால், ரவிஷங்கர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் முத்துவேலுவை ஆசிரியர்கள் பாராட்டி பேசினர். தொடர்ந்து அவருக்கு சாலவை அணிவித்து, சிறந்த தமிழாசிரியர் விருதினை, பள்ளி தலைமை ஆசிரியர் குருநாதன் வழங்கினார்.
+
Advertisement