சேலம், ஜூலை 29: சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் நந்தகுமார் (22). இவரும் வீரபாண்டியைச் சேர்ந்த தனது நண்பரான கதிரவனும், நேற்று ஏற்காட்டிற்கு டூவீலரில் சுற்றுலா வந்தனர். அங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு, இருவரும் டூவீலரில் அடிவாரம் ேநாக்கி வந்து கொண்டிருந்தனர். அப்ேபாது 2வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நந்தகுமார் ஓட்டி வந்த டூவீலர், எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நந்தகுமார், கதிரவனை சாலையில் சென்றவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் கதிரவனை பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் கதிரவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement