கெங்கவல்லி, ஜூலை 29: ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியில் வசிக்கும் விவசாயி செந்தில், 2 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சவுக்கு தோப்பு அருகில் உள்ள புல் பூண்டுகள் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த செந்தில், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கெங்கவல்லி நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணிநேரம் போராடி சவுக்கு தோப்பு மற்றும் அருகில் உள்ள விவசாய தோட்டத்துக்கு தீ பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement