Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லாரி டிரைவர் தற்கொலை

ஏற்காடு, ஜூன் 7: ஏற்காடு தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(38). லாரி டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகள் உள்ளனர். கணவன் - மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுப்ரமணி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டிலிருந்து வெளியே வராததை கண்டு அக்கம்- பக்கத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சுப்ரமணி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஏற்காடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.