Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் திறப்பு

இடைப்பாடி, அக்.26: இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குறுக்குப்பாறையில் இடம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், வேறு இடத்தில் மாற்றக்கோரி தமிழ்நாடு விவசாய வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று திடக்கழிவு திட்ட கட்டிடம் திறக்கப்படவிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேவூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தம்பிதுரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால் 20 பேரை கைது செய்து, அரசிராமணியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் குறுக்குப்பாறையூர் திடக்கழிவு கட்டிடத்தை சங்ககிரி மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, அரசிராமணி பேரூராட்சி தலைவர் காவேரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், தாசில்தார் வாசுகி, பேரூராட்சி துணைத் தலைவர் கருணாநிதி, சங்ககிரி மண்டல துணை தாசில்தார் சண்முகம், ஆர்ஐ கனகராஜ், திமுக நிர்வாகிகள் செந்தில், வெங்கடாசலம், வழக்கறிஞர் செல்லப்பன், மேஸ்திரி முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.