சேலம், ஆக.18: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்தவங்கி சார்பில், ரத்ததானம் அளித்த தன்னார் வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையின் ரத்தவங்கி துறைத்தலைவர் லதா வரவேற்றார். மருத்துவமனையின் டீன் தேவிமீனாள், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டிஆர்ஓ ரவிக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, சேலம் மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு 3 முதல் 4 முறை ரத்ததானம் வழங்கிய 60 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இதில் ரத்தவங்கி அலுவலர் ரவீந்திரன், மருத்துவர் அருணாச்சலம், ஏஆர்எம்ஓ பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.