சேலம், நவ.15: வீராணம் அருகே விவசாயியை தாக்கி செல்போன், பணத்ைத பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் வீராணம் பக்கமுள்ள பூவனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(34). விவசாயியான இவர் நேற்று மாலை 6 மணியளவில் பூவனூர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் 4 பேர் அமர்ந்து மதுகுடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மணிகண்டனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
+
Advertisement
