இளம்பிள்ளை, அக்.12: மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல்கான் மகன் ரம்ஜன்கான்(23) என்பவர், வாடகைக்கு கடை எடுத்து பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று மகுடஞ்சாவடி முத்துமுனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த பாபு மகன் பசுபதி (29) என்பவர், ஓசியில் பிரியாணி கேட்டு கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அங்குள்ள பிரியாணி அண்டாவை தூக்கி நடுரோட்டில் வீசி விட்டு கடை உரிமையாளரை தாக்கினார். இதுகுறித்து ரம்ஜன்கான் மகுடஞ்சாவடி போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் பசுபதியை கைது செய்தனர். பின்னர், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement