இடைப்பாடி, செப்.2: இடைப்பாடி கோட்டத்தில் நாளை(3ம்தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேட்டூர் மேற்பார்வையாளர் தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர் புறநகர், கொங்கணாபுரம், கன்னந்தேரி புறநகர், ஜலகண்டாபுரம் வடக்கு, தெற்கு, செட்டிமாங்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என இடைப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
+
Advertisement