கந்தர்வகோட்டை, மார்ச் 5: கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணல் பரப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலை கந்தர்வகோட்டை பகுதியில் பிரதான சாலையில் குப்பையும், மணலும் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.
வாகனம் செல்லும்போது தூசி பரவுவதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண்ணில் தூசி பறந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரதான சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளையும் மணல்களையும் அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.


