ஈரோடு,ஜூலை 8: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று, ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட ஆயப்பாளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்டது கங்காபுரம், ஆயப்பாளி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்கு கடந்த பல வருடங்களாக சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல, இந்த பகுதியில் தார் சாலை வசதியும் இல்லை. எனவே இப்பகுதி மக்களுக்கு சாக்கடை கால்வாய் மற்றும் தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.