பழநி, மே 26: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஓய்வுபெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அந்தந்த கோயில்கள் மூலமாகவும், நிதி இல்லாத கோயில் பணியாளர்களுக்கு அறநிலையத்துறை மூலம் ரூ.100 கோடி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வட்டித்தொகையின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அரசிற்கு இதனால் எந்தவித பொருட் சுமையும் இல்லை. கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் 65 வயதைக் கடந்த முதியவர்கள் ஆவர். அவர்களுக்கு மருத்துவ செலவு, உணவு தேவைகள் போன்றவற்றிற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் போதியதாக இல்லை. இன்றை விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கோயில்களில் ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
+
Advertisement


