பெரம்பலூர், ஜன.25: பெரம்பலூரில் கூட்டுறவுதுறை அலுவலர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் அறிவுரையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுதுறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி ஜனவரி 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
புத்தாக்க பயிற்சியில் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் கையேட்டினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக துணைப்பதிவாளர் இளஞ்செல்வி, பெரம்பலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


