ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 31: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 8 வார்டு வரையிலான பொதுமக்கள் பயன் பெறும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர். இம்முகாமில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜு, திமுக நகர செயலாளர் கண்ணன், தென்றல் ஜலீல், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
+
Advertisement