திருப்புவனம், ஆக. 30: திருப்புவனம் அருகே லாடனேந்தல் திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா (48). திமுக மாவட்ட பிரதிநிதி. நேற்று காரிலிருந்து 10 பேர் கொண்ட கும்பல் வேகமாக இறங்கி சுப்பையா வீட்டுக்குள் சென்று அவரை சரமாரியாக தாக்கியது. வீட்டின் முன்பாக நின்ற கார் கண்ணாடியையும் உடைத்து விட்டு ஓடிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த சுப்பையா மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுப்பையாவின் மகனுக்கும், இவரது அண்ணனின் பேரனுக்கும் நேற்று திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுறது. இதுகுறித்த புகாரில் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement