காரைக்குடி, ஆக. 30: காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் போஸ் மகன் மணிமுத்து. இவரும் இவரது அண்ணன் திருமுருகபாண்டியனும் ஆடியோஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 27ம் தேதி இரவு திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அபிராமி மகாலில் டியோ செட்டை கழட்டி கொண்டு இருந்துள்ளனர். அப்போது ரயில்வே ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் தங்கசாமி (எ) நவீன் (25), முருகேசன் மகன் சூரியபிரகாஷ் (27), நாகலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்த சரவணகுமார் மகன் ஹரிஹரசுதன் (24), புதுசந்தைப்பேட்டையை சேர்ந்த தில்லைகருப்பையா மகன் ராமலிங்கம் (28) ஆகிய 4 பேரும் டான்ஸ் ஆடணும் பாட்டுப் போடு என அசிங்கமாக பேசி, ஆடியோ செட்களை சேதப்படுத்தி, இரும்பு ராடால் அவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் 4 பேர் மீது வடக்கு, தெற்கு, அமராவதிபுதூர் ஆகிய காவல்நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. இது குறித்து மணிமுத்து குன்றக்குடி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.
+
Advertisement