ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கடன் திட்ட அறிக்கை கையேட்டினை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளா அன்பரசு பெற்றுக் கொண்டார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு ரூ.18,521.38 கோடி வங்கிகள் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையானது கடந்த ஆண்டு இலக்கான ரூ.11,850.68 கோடியை விட 56.2 சதவீதம் அதிகம். இதில் முன்னுரிமைக் கடன்களுக்கு அதிக தொகையானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறைக்கு ரூ.13,030.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1006.95 கோடியும், வீட்டுக்கடன்களுக்கு ரூ. 37.32 கோடி, கல்விக் கடன்களுக்கு ரூ.20.68 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.0.23 கோடி, இதர கடன்களுக்கு ரூ.65.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அல்லாத கடன் ரூ. 4,354.6 கோடி என மொத்தம் ரூ18521.38 கோடி கடன் திட்ட அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
+
Advertisement