சிவகங்கை, ஆக. 29: தேவகோட்டை அருகே கோனேரிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி காளிமுத்து(60). கடந்த 18.10.2010 அன்று ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த தங்கராஜ்(30), ஆண்டிச்சாமி(33), கருப்பு (எ) முருகேசன்(22), ஆளவந்தான் (எ) ராஜா(23), காயாம்பு(32), மூக்கன் சின்னச்சாமி (34), பாகன் சின்னச்சாமி (30) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ஆண்டிச்சாமி இறந்து விட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜ், கருப்பு(எ) முருகேசன், ஆளவந்தான், காயாம்பு, மூக்கன் சின்னச்சாமி, பாகன் சின்னச்சாமி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
+
Advertisement