சிவகங்கை, செப். 27: இளையான்குடியில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியினால் ஏற்படும் பயன்கள், போதை பழக்கத்தை பழகாமல் இருத்தல் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி பிரதீப், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், மனநல மருத்துவர் கார்த்திகேயன், பேராசியர் நாசர், நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் பேராசியர் பாத்திமா கனி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
+
Advertisement