சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையினரின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்திற்கு வருவாய்த் துறையினர் கூட்டமைப்பு மாவட்டத் துணைத் தலைவர் தாசில்தார் நாகநாதன் தலைமை வகித்தார். இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் களப்பணி மற்றும் மனுக்களின் மீதான பரிசீலனைக்கு கால அவகாசம் வேண்டும். ஜூலை 1ம் தேதி வருவாய்த்துறை தினமாக அரசனை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement