தேவகோட்டை, செப்.26: தேவகோட்டை வட்டாரத்தில் தீவிர எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு தீவிர பிரசாரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அழகு தாஸ்,மருத்துவ அலுவலர் அப்துல் பைசில் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மேற்பார்வையாளர் வாருணி தேவி முன்னிலை வகித்தார். இதில் திருவேகம்பத்தூர் மற்றும் சருகணி பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சியில் உள்ள மக்கள் நல பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்களுக்கு எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இதில் தேவகோட்டை அரசு மருத்துவமனை ஆலோசகர்கள் சந்தன தெரசா, பழனி குமார், லேப் டெக்னிசியன் சுதா மற்றும் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முருகன், திருவேகம்பத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement