சிவகங்கை, செப்.23: விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாட்டில் உளுந்து தேவையில் தன்னிறைவு அடைய வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தனிப்பயிராக மட்டுமில்லாமல் வரப்பு பயிராக உளுந்து பயிர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வம்பன் பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை உளுந்தில் 11 ரகங்கள் அறிமுகப்பட்டுள்ளன. வம்பன் 11ரகம், 70 முதல் 75 நாள் வயதுடையது. மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வரைஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. அதிக காய்பிடிக்கும், ஒரே மாதிரி முதிர்ச்சியடையும் திறனுடையது. ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் கிடைக்கும் தன்மை கொண்டது. இது வம்பன் 8 ரகத்தை விட 12 சதவீதம் கூடுதல் மகசூலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை பட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது. எனவே விவசாயிகள் வம்பன் 11 ரக உளுந்து பயிரிடலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement