கமுதி, செப்.23: கமுதி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டு வெள்ளையாபுரம் மற்றும் 15வது வார்டு சிங்கப்புலியாபட்டி ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரியும், மேலும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு வார்டு பகுதிகளுக்கு மாற்றி விடப் பட்டதாகவும் கூறி இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் 14வது வார்டு உறுப்பினர் சத்யா ஜோதிராஜா மற்றும் 15வது வார்டு உறுப்பினர் திருக்கம்மாள் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரை கண்டித்து பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
+
Advertisement