மானாமதுரை, ஆக.22: மானாமதுரை அருகே தனியார் பஸ் கண்டக்டரை மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தவச்செல்வம்(23). இவர், மதுரை- இளையான்குடி இடையே இயங்கும் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்து மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்கி உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், அவரை சரமாரியாக தலை, முகம், கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த தவச்செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement