சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்டத்தில் ட்ரக்ஸ் உரிமம் பெறாமல் செயல்படுகின்ற மருத்துவமனைகள், உரிய ஆவணங்களுடன் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நேரோடிக்ஸ் ட்ரக்ஸ் (என்டிஆர்சி) உரிம் பெறாமல் செயல்படுகின்ற மருத்துவமனைகள், உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி ஆணையர் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். உரிமம் பெறாமல் நேரோடிக்ஸ் ட்ரக்ஸ் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனையின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement