ராமேஸ்வரம், செப்.19: மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் அஞ்சனா தலைமை வகித்தார்.தாலுகா செயலாளர் கலைச்செல்வன், நிர்வாகிகள் சிவா, ஜேம்ஸ், ஜெனிஷா, ரூபா தாரணி, நம்பு செல்வம், வெங்கடேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் தர்மா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துனைத்தலைவராக செயல்பட்டு வந்த வைரமுத்து என்பவரின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தொண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
+
Advertisement