மண்டபம், நவ. 18: மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கள் கிழமை முழுவதும் தூறல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதி மற்றும் மண்டபத்தை சுற்றியுள்ள மரக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோன்வலசை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தூரல் மழை பெய்ய துவங்கியது. இந்த மழையானது சில நேரம் பலத்த மழையாகவும், சில நேரம் தூறல் மழையாகவும் பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு தூறல் பெய்தது.
இதனால் மண்டபம் பகுதியில் கட்டிடத் தொழிலாளிகள் மற்றும் மீன்களை உலர வைக்கும் தொழிலாளிகள் உட்பட கூலித் தொழிலாளிகளின் இயல்பு வாழ்க்கையும், அதுபோல வெளியூர்களுக்கு வர்த்தகம், மருத்துவம், தனியார் நிறுவனம் பணிக்கு செல்லும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.


