திருவாடானை, அக். 17: திருவாடானை அருகே உள்ள சிறுமலைக்கோட்டை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குற்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏதுவாக, கிராம மக்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். சிறுமலைக்கோட்டை கிராம மக்கள் அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடியாகத் திகழும் வகையில் தங்கள் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளனர். கிராமத்தில், கோயில் பகுதி, கீழக்குடியிருப்பு பகுதி, ஊராட்சி மன்ற அலுவலகம், முக்கிய சாலைப் பகுதி மற்றும் குட்டைப் பகுதி ஆகிய 5 முக்கிய இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்களை டிஎஸ்பி சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராம மக்களின் இந்த முயற்சிக்குக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
+
Advertisement