ஆர்.எஸ்.மங்கலம், செப்.17: ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுவதால், உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோக இருக்காது என மின்வாரிய அதிகாரி அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்காேட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வூர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்பிராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ராமநாதபுரம் செயற்பொறியாளர்(பாெ) குமரவேல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement