மண்டபம்,செப்.17: காரன் ஊராட்சி மல்லிகா நகர் பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் அப்பகுதியில் சேதம் அடைந்த செம்மண் சாலையை அகற்றி விட்டு, தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் காரன் ஊராட்சியில் மல்லிகை நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செம்மண் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து கற்கள் பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செலவும் இருசக்கர வாகனங்களல் செல்லவும் மிகவும் அவதிப்பட்டு செல்லுகின்றனர். அதனால் இந்த பகுதியில் செம்மண் சாலையை அகற்றி புதியதாக தார் சாலை அமைப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement