கீழக்கரை, செப்.17: கீழக்கரையில் திமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, மூர் பிரதர்ஸ் சார்பில் வார்டு கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் நினைவு பரிசாக காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏவுக்கு மக்கா வடிவமைக்கப்பட்ட பெட்டகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கினார். இதில், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜைனுதீன், அவைத்தலைவர் ஜமால் பாரூக், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் முகமது காசிம், நசீருதீன், மீரான் அலி, ஹாஜா முகமது சுஹைபு தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் கேஜி,எபன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement