காரைக்குடி, செப். 16: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் திருப்பத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர் தின விழா கொண்டாப்பட்டது. கல்லூரியின் அமைப்பியர் துறை தலைவர் ஆண்ட்ரூஸ் ஹெப்சிபா வரவேற்றார். கல்லூரி தலைவர் சொக்கலிங்கம் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் சசிகுமார் துவக்கிவைத்தார். பொறியாளர் அருணாச்சலம், அசோசியேசன் தலைவர் சையது ஜாபர், செயலாளர் கவுதம் செண்பக், பொருளாளர் அகமதுஅலி உள்பட பலர் சிறப்புரையாற்றினர். பொறியியல் துறையில் இன்றைய வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மெக்கட்ராணிக்ஸ் துறைத் தலைவர் சுபாகர் நன்றி கூறினார்.
+
Advertisement